LATEST NEWS
அசல் கோளாறுக்கும் எனக்கும் இருந்த உறவு இதுதான்…. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் உண்மையை போட்டுடைத்த நிவாஷினி….!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 40 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர் நிவாஷினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அசல் கோளாறுடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் அசல் கோளாறு இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு அவரின் ஆட்டம் யாரும் அறியாததால் நிவாஸினி எலிமினேஷன் செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு நிவாஸினி அளித்துள்ள ஒரு பேட்டியில், தனக்கும் அசல் கோளாறுக்கும் இடையில் என்ன தொடர்பு இருந்தது என்பது குறித்த உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது அசல் கோளாறு பற்றி எனக்கு ஜோர் தாலே பாடல் மூலம் தான் தெரியும். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். குயின்சியுடன் சேர ஆரம்பித்த பிறகு தான் அசல் கோளாறுடன் நான் பேச ஆரம்பித்தேன்.
அவரது ஸ்டோரியை என்னிடம் பகிர்ந்து கொண்டார். எனக்காக பேசும் ஒரு தோள் கொடுக்கும் நண்பராக அவர் இருந்தார். அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் நான் சாப்பிட கஷ்டப்பட்டு பின் மனநிலையை மாற்றிக் கொண்டேன். நான் ஒரு பொண்ணு அவர் ஒரு பையன் என அனைவரும் பார்த்தார்கள். நான் சிங்கப்பூரில் இப்படியாகத்தான் பாலினம் பார்க்காமல் பழகுவோம் என நிவாஸினி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
