மரக்கன்றுகளை நட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இடையழகி ரம்யா பாண்டியன்… வெளியான புகைப்படங்கள்… பாராட்டும் ரசிகர்கள்… - Cinefeeds
Connect with us

CINEMA

மரக்கன்றுகளை நட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இடையழகி ரம்யா பாண்டியன்… வெளியான புகைப்படங்கள்… பாராட்டும் ரசிகர்கள்…

Published

on

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு  வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே மொட்டை மாடியில் தனது இடுப்பை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பிரபலமானார் .

அந்தப் புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். ஆனாலும் ஒரு சில நெகட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்தது. பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததால் இவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். தற்போது இவரின் கைவசம் இடும்பன் காரி, உள்ளிட்ட ஓரிரு படமே உள்ளது.

அந்த வகையில் அவர் சமீபகாலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.  நடிகை ரம்யா பாண்டியன் செடிகள் வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்த விஷயமே. இவர் சில இயற்க்கை ஆர்வலர்களுடன் சேர்ந்து மரம் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.


இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ ஒவ்வொரு ஆண்டும் 143 மரக்கன்றுகளை நட்டு, வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் இயற்கையின் அழகை வளர்க்க மாநிலம் முழுவதிலும் இருந்து கூடிவரும் நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த நன்றி’ என கூறி,

அவர்களுடன் மரம் நட்டபோது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரின் இச்செயலுக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.