LATEST NEWS
எதிர்நீச்சல் அடுத்த ஆதி குணசேகரன் இவர்தானா?… கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கும் நடிகர் வேல ராமமூர்த்தி… சன் டிவி எடுத்த அதிரடி முடிவு…

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக ‘ஏமா ஏய்’ என்று இவர் கூறும் வசனம் மீம் ஆக மாறியது.மறைந்த நடிகர் மாரிமுத்து நடிகர் மட்டுமல்ல இவர் ஒரு இயக்குனரும் கூட.
இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படஙகளை இயக்கியுள்ளார். மேலும் ‘யுத்தம் செய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீளவில்லை.
57 வயதாகும் இவருடைய மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தற்பொழுதும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
தற்பொழுது மாரிமுத்துவுக்கு பதில் தற்போது வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்கபோவதாக தகவல் பரவிவந்தது. இத்தகவலை அவரும் உறுதி செய்திருந்தார்.ஆனால் சீரியலில் நடித்த அனுபவம் தனக்கு இல்லை என்பதாலும், ஏற்கனவே பல படங்களில் ஒப்பந்தமாகி கால்ஷீட் கொடுத்ததால் அதிலிருந்து விலக முடியாது என பேசி உள்ளார். மேலும் வெளிநாட்டில் ஷூட்டிங் இருக்கிறது என இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம்.
இந்நிலையில் மாரிமுத்து நடித்த காட்சிகள் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளதால் உடனடியாக அடித்த குணசேகரனை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சன் தொலைக்காட்சி இருக்கிறது. அதன்படி இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அடுத்த இரண்டு நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அவர்கள் வேறு யாருமில்லை, நடிகர் ராதாரவி மற்றும் நடிகர் பசுபதி தான். பொறுத்திருந்து பார்ப்போம். யார் ஆதி குணசேகரனாக திரையில் வருவார்கள் என்பதை.