LATEST NEWS
திருமணம் முடிந்த கையோடு தீபத்திருநாளை கொண்டாடிய நடிகை ரித்திகா…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே சமீபத்தில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரை காதலித்த மிக எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ரித்திகா கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தனது வீட்டில் தீப ஒளியை ஏற்றி வைத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க