மருத்துவ செலவுக்கு பிரபல நடிகரிடம் 25 கோடி கடன் வாங்கிய சமந்தா?.. இன்ஸ்டாவில் அவரே பகிர்ந்த தகவல்… வைரல் பதிவு..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

மருத்துவ செலவுக்கு பிரபல நடிகரிடம் 25 கோடி கடன் வாங்கிய சமந்தா?.. இன்ஸ்டாவில் அவரே பகிர்ந்த தகவல்… வைரல் பதிவு..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் சமந்தா தற்போது இந்தோனேசியாவின் பாலிக்கு தனது தோழிகளுடன் சுற்றுலா சென்று உள்ளார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வரும் நிலையில் சமந்தாவின் சிகிச்சை செலவுக்காக பிரபல நடிகரிடம் 25 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக ஒரு செய்தி பரவியது.

Advertisement

தற்போது இந்த செய்திக்கு சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமாக பதில் அளித்துள்ளார். மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்கு 25 கோடியா? உங்களை யாரோ ஏமாற்றி உள்ளார்கள் நான் அதில் ஒரு சின்ன தொகையை தான் செலவு செய்தேன். நான் இத்தனை காலம் என்ன சம்பாதித்தேன் என்று நினைக்கிறீர்கள், என்னை எனக்கு பார்த்துக் கொள்ளத் தெரியும் இந்த நோய் பல ஆயிரம் பேருக்கு வருகிறது சிகிச்சை பற்றி தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என சமந்தா கூறியுள்ளார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in