LATEST NEWS
காதலருடன் ஜாலியாக ஃபாரின் டூர் சென்ற தமன்னா?… அவரே வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்… குளம்பும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சிறுத்தை மற்றும் அயன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி என பழமொழி திரைப்படங்களில் நடித்த தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.
இவர் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
குறிப்பாக காவலா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் பட்டி தொட்டி எல்லாம் கலக்கி கொண்டிருக்கிறது.
சினிமாவிற்கு வந்து 18 வருடங்கள் ஆகியும் இன்னும் இளமையாகவே தமன்னா இருந்து வருகின்றார்.
தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜீ கர்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதனைத் தவிர பல படங்களிலும் கமிட் ஆகியுள்ள நிலையில் அந்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
இதனிடையே பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா தீவிரமாக காதலித்து வருவதாகவும் விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் இணையத்தில் வெளியானது.
அது மட்டுமல்லாமல் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக கடந்த வாரம் விமான நிலையத்தில் நடிகர் விஜய் வர்மா மற்றும் தமன்னா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தனித்தனியாக வரும் வீடியோ ஒன்று வெளியானது.
அதில் இருவரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று விடுமுறையை ஜாலியாக கழிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள தமன்னா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒருவேளை காதலருடன் சுற்றுலா சென்று இருப்பாரோ என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இருந்தாலும் தமன்னா தனது காதலர் இருக்கும்படியான எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடவில்லை.