VIDEOS
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அந்த சத்தத்தை கேட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடிய டாப்சி… வைரலாகும் வீடியோ..!!

ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை டாப்ஸி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் முதன் முதலில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் வந்தான் வென்றான் மற்றும் காஞ்சனா உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இவரின் அடிபாலும் அழகாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் பிசியான நடிகையாக நடித்து வருகிறார். அதே சமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் டாப்ஸி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பார்ட்டி பேப்பரை முறுக்கி உடைக்க அது வெடித்த சத்தத்தை கேட்டு டாப்ஸி அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Birthday celebration gone wrong …. pic.twitter.com/dfkycaomTc
— taapsee pannu (@taapsee) July 27, 2023