CINEMA
போகி போகி போகி…! 1 மில்லியன் பார்வைகளை கடந்த “அடங்காத அசுரன்” வீடியோ பாடல்…!!!

தனுஷின் ஐம்பதாவது படம் ராயன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்திருந்தார். மேலும் இதில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், செல்வராகவன் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.
உலக அளவில் வசூலில் மாஸ் காட்டிய இந்த திரைப்படம் வெளியாகி ஏழு நாட்களில் 102 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலமாக 100 கோடி வசூல் செய்த தனுஷின் முதல் திரைப்படம் என்ற சாதனையை ராயன் படைத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் “அடங்காத அசுரன்” வீடியோ பாடல் நேற்று வெளியான நிலையில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.