LATEST NEWS
“24 வருடங்களுக்கு பிறகு அப்பா குடும்பத்துடன்”…. ரஜினி காலில் மகன்களுடன் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வாதி மற்றும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருந்தாலும் தங்களின் இரண்டு பிள்ளைகளுக்காக விவாகரத்து செய்யாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- லதாவிடம் சென்ற யாத்ரா மற்றும் லிங்காவுடன் ஐஸ்வர்யா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படங்களை பகிர்ந்து, 24 வருடங்கள் கழித்து தனியாக மகன்கள் தன் அப்பா குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதைஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/ash_rajinikanth/status/1615600299959517185