LATEST NEWS
அந்த பிரபலத்தை 2-ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஸ்வர்யா… ரஜினியின் முடிவு என்ன?… மாலத்தீவு செல்ல இதுதான் காரணமா..??

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்த திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் பிறந்த நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் தனித்தனியாக பிரிய உள்ளதாக அறிக்கை வெளியிட்டனர். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவரை பிரிந்த பிறகு தனது இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா தற்போது திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது தனுசை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா உதவி இயக்குனர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தனது தந்தை ரஜினியிடம் கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு கோபமடைந்த ரஜினி மகளை திட்டி விட்டு மாலத்தீவுக்கு தனியாக சென்றுவிட்டார். அது மட்டுமல்லாமல் தனது மகளிடம், தனுஷ் விவாகரத்து பெரும் எண்ணத்தில் இல்லை, நிச்சயம் ஒரு நாள் உன் மீது பாசம் காட்டுவார், அதற்கு முன்பு ஒரு தப்பான முடிவை எடுத்து விடாதே என்று அறிவுரை கூறியதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையிலேயே ரஜினியை மாலத்தீவிற்கு அனுப்பி வைத்தது ஐஸ்வர்யா எனவும் இரண்டாம் திருமணம் பற்றி வந்த செய்தியும் முற்றிலும் பொய் என தகவல் வெளியாகி உள்ளது.