சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.

அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர்.

மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் இனிய என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே கயல் சீரியலில் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். இதனிடையே இருவரும் சீரியல்களில் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார்கள்.

அவ்வகையில் நேற்று இவர்களின் மகள் ஐலாவின் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அதனை வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

alya_manasa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@alya_manasa)