விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நித்யஸ்ரீ.
இவர் தற்போது சிறந்த பாடகராக சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது நித்யஸ்ரீ புதிய தோற்றத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய தலைமுடியை கலரிங் செய்துள்ளார்.
அந்த வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் அட நித்யஸ்ரீயா இது என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க