LATEST NEWS
அம்மாடியோ இத்தனை லட்சமா?…. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டருக்கு வழங்கப்பட்ட சம்பளம்…. கேட்டா தலையே சுத்துது….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் நிவாஷினி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அசீம், ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன், கதிரவன், தனலட்சுமி, அமுதவாணன் மற்றும் ரா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது மணிகண்டன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் தான்.
இதில் குறைந்த வாக்குகள் பெற்று சற்று முன் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள ராபர்ட் மாஸ்டருக்கு தற்போது வரைக்கும் ஒரு வாரத்திற்கு 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.