LATEST NEWS
திரையுலகில் மற்றொரு பேரிழப்பு…. நடிகை லலிதா லஜ்மி காலமானார்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை லலிதா லஜ்மி. இவர் ஓவியர்,எழுத்தாளர் மற்றும் நடிகை என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்தவர். இவர் தாரே ஜமீன்பர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மறைந்த பாலிவுட் நடிகர் குரு தத்தின் சகோதரி ஆவார். இந்த நிலையில் இவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு வயது 90. நடிகையாக மட்டுமல்லாமல் மிக சிறந்த ஓவியரான இவர் பல தத்துரூப படைப்புகளை வழங்கியுள்ளார். தன்னுடைய அபூர்வமான ஓவியங்களை கொண்டு பல சர்வதேச கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார். இந்த நிலையில் இவர் திடீரென உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.