LATEST NEWS
பேசுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பேசுங்க.. தந்தையை அவதூறாக பேசியதால் பொங்கி எழுந்த ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா..!!

தமிழ் திரை உலகில் முன்னணி இசை அமைப்பாளராக திகழும் ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியை சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மழை பெய்ததால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பிறகு இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் என்று முன்பு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என ஏ ஆர் ரகுமான் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே சமயம் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் ரசிகர்கள் அனைவரும் சிரமப்பட்டனர். இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் ஏ ஆர் ரகுமான் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு வருந்துவதாக தெரிவித்தார்.
அதனைப் போலவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் நடந்த சம்பவங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாக கூறி மன்னிப்பு கேட்டனர். இந்த நிலையில் ஏ ஆர் ரகுமான் குறித்து அவதூறாக பேசுவதற்கு முன் அவர் மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார் என யோசித்துப் பேசுங்கள் என்று அவரின் மகள் கதீஜா ரகுமான் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.