LATEST NEWS
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அருண் விஜய்…. புகைப்படத்தை வெளியிட்டு அவரே போட்ட பதிவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன்தான். ஆரம்பத்தில் இவரின் படங்கள் ஹிட் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த இவரின் நடிப்பில் வெளியான பல படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அந்த படம் அமைந்தது. அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவர் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பின் போது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அருண் விஜய் அதில் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க