CINEMA
புது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகர் ஆர்யா…. டைட்டில் என்ன தெரியுமா..??

நடிகர் ஆர்யா புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் ரன் பேபி ரன் திரைப்படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா நடிக்க உள்ளாராம். மலையாளத்தில் பிரபல கதை ஆசிரியரான முரளி கோபி இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.
லூசிபர் என்ற படம் இவர் கதையில் உருவானது தான் . மார்க் ஆண்டனி படத்தை உருவாக்கிய வினோத்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள “மிஸ்டர் எக்ஸ்” என்ற இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.