மறுமணம் செய்து கொள்வாரா பாக்கியலட்சுமி?… ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பங்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

மறுமணம் செய்து கொள்வாரா பாக்கியலட்சுமி?… ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஏற்படவுள்ள அதிரடி திருப்பங்கள்…

Published

on

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி இந்த நாடகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியை  அவருடைய  கணவன் கோபி கொஞ்சம் கூட மதிப்பதில்லை.மேலும் ராதிகா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் கோபி.

இதைத்தொடர்ந்து கோபிக்கும் ராதிகாவுக்கும் பாக்கியாவின் கண் முன்னே திருமணம் நடந்தது. கோபியின் அம்மா, அப்பா, குழந்தைகள் என மொத்த குடும்பமும் பாக்யாவின் பக்கமே உள்ளனர். தற்பொழுது ராதிகா முழுநேர வில்லியாக மாறி விட்டார். மேலும் இந்த சீரியலில் கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பாக்கியா கோபியையும் அவரது மனைவி ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியேற்றியும் விட்டார்.

Advertisement

தற்பொழுது இந்த சீரியலில் பாக்யா காலேஜுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். மறுபுறம் கேன்டீன், இங்கிலிஷ் க்ளாஸ் என பல விஷயங்களையும் செய்து கொண்டிருக்கிறார். அவர் இங்கிலிஷ் க்ளாசில் பழனிச்சாமி உடன் நெருங்கி பழகி வருவதை பற்றி கோபி ஏற்கனவே பிரச்சனையை கிளப்பி வருக்கிறார். ஆனால் பாக்யா அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பழனிச்சாமியின் அம்மா ஒரு விஷயத்தை பேசுகிறார். பாக்யா வீட்டுக்கு சென்று பெண் கேட்க போவதாக அவர் கூறுகிறார். ஆனால் பழனிச்சாமி அதை வேண்டாம் என கூறிவிடுகிறார். இதைத்தொடர்ந்து பாக்யாவின் மறுமணம் குறித்த காட்சிகள் தான் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in