VIDEOS
“பிக்பாஸ் போனதே தப்பா போச்சு”…. கண்ணீர் மல்க பேசிய விஜய் டிவி பிரியங்கா…. வைரலாகும் வீடியோ இதோ….!!!!

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன.அந்நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் அந்த நெகடிவ் கமெண்ட்கள் அனைத்தும் இவரை பின்தொடர்ந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதை சரி செய்து கொண்டு தன்னுடைய பெயரை கெட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் பிரியங்கா.
இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் மலேசியா சென்றுள்ள நிலையில் அங்கு அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இவ்வளவு அன்பை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று பிரியங்கா வீடியோவில் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் சென்றதே தவறு என்று யோசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் இப்படி அன்பு காட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது என பிரியங்கா கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.