LATEST NEWS
நீல நிற சேலையில் தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் ஜனனி… போட்டோ பார்த்து கிறங்கிய ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர். தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஜனனி தற்போது நீல நிற சேலையில் தென்னிந்திய நடிகைகளுக்கு சவால் கொடுக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சேலையில் பார்க்கும்போது ஜனனி கண்களுக்கு அழகிய தேவதையாக தெரிவதாக ரசிகர்கள் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க