LATEST NEWS
விரைவில் தொடங்கும் பிக்பாஸ் 7வது சீசன்.. நடிகர் கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. கேட்டா ஆடிப் போயிருவீங்க..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்ட போது என்ன என்று ஐடியா இல்லாமல் இருந்த மக்கள் தற்போது நிகழ்ச்சி குறித்து நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். ஆரம்ப நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து அடுத்தடுத்து 6 சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதே சமயம் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. அதனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 7-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதற்கான செய்திகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
தற்போது இந்த ஏழாவது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் அட இத்தனை கோடியா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.