CRIME
ஐயோ கொடுமையே.. 16 வயது மாணவியை பலாத்காரம் செய்யப்பட்டு கட்டிடத்தில் வீசய கொடூரர்கள்… அரசு அதிகாரிகளின் மகன்களின் வெறிச்செயல்.. திடுக்கிடும் பின்னணி..!!
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ‘ஜெஜியாங் சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஜென்ஷியாங் மேல்நிலைப் பள்ளியில்’ பயின்று வந்த 16 வயது மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் அரசு அதிகாரிகளின் மகன்கள் சிலர் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், பின்னர் அந்த மரணத்தைத் தற்கொலை போலக் காட்டுவதற்காக உடலை கட்டிடத்தின் கூரையிலிருந்து கீழே வீசியதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்தப் பெண்ணின் உடல் பள்ளிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கான்கிரீட் கைப்பிடிச் சுவரில் விழுந்து கிடந்ததாகவும், அவரது முதுகில் இரண்டு கத்திகள் குத்தப்பட்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குற்றவாளிகளுக்குப் பின்னணியில் இருக்கும் செல்வாக்குமிக்க அரசாங்கத் தொடர்புகள் காரணமாக இந்தச் சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகமோ அல்லது சீன ஊடகங்களோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை என்றும், இந்த விவகாரம் கடுமையான இணையக் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
