CINEMA
“நான் தீவிர ரஜினி ரசிகன்” கங்குவா ரிலீஸ் தேதி மாற்றப்படுமா…? வைரலாகும் வீடியோவால் குழப்பம்…!!
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா மொத்தம் ஏழு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா திரைப்படங்கள் அக்.10 ஆம் தேதி ஒரேநாளில் வெளியாகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடைய மோதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கங்குவா பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவின் பேட்டி ஒன்று வைரலாகிறது. அதாவது நான் தீவிர ரஜினி ரசிகர் என்றும், அவர் படத்துடன் மோத மாட்டேன் எனவும் கூறுகிறார். இதனால், கங்குவா ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.