LATEST NEWS
சார்பட்டா பரம்பரை பட நடிகை அனுபமா குமாரின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி தமிழ் சினிமாவில் சேரனின் பொக்கிஷம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை அனுபாமா.
அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் ஆர்யாவின் சார்பட்டா படத்தில் அவரின் அம்மாவாக நடித்த அசத்தியிருப்பார்.
அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது. ஆர்யா பாக்சிங் விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர் என்பதால் தந்தையைப் போலவே ரௌடியாக மாறிவிடுவார் என்ற பயத்தில் ஒவ்வொரு முறையும் அவரை அடிப்பது பாசத்தை கொடுப்பது என அவரின் நடிப்பு மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் அனுபாமா பிசியாக நடித்து வருகிறார்.
இவர் இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி திரைப்படமான இஸ்கியாவில் நடிகையாக அறிமுகமானார்.
அவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிப்பு மற்றும் மாடலிங் தவிர அனுபமா ஒரு பத்திரிக்கையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் சமீபத்தில் இண்டி பிளாக் அண்ட் ஒயிட் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக மாறினார்.
சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு கலாட்டா கிரவுண்ட் விருது மற்றும் பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த திரைப்படத்திற்காக நாலு பேர் தமிழ் திரைப்பட விழாவின் சிறந்த துணை நடிகருக்கான விருது இவருக்கு கிடைத்தது. கோயம்புத்தூரை சேர்ந்த இவர் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.
இவர் கடற்படை தளபதியான சிவாஜி குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஆதித்யா என்ற ஒரு மகன் உள்ளார்.
தற்போது இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் நிலையில் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
அடிக்கடி தங்கள் குடும்ப புகைப்படங்களை இவர் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது அனுபவமாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
