அட்ராசக்க…! வாழை படத்தின் 3-வது பாடல் வெளியீடு…. இணையத்தில் செம வைரல்…!! - cinefeeds
Connect with us

CINEMA

அட்ராசக்க…! வாழை படத்தின் 3-வது பாடல் வெளியீடு…. இணையத்தில் செம வைரல்…!!

Published

on

கடந்த 2018 ஆம் வருடம் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபலமானவர் மாரி செல்வராஜ். அதன்பிறகு கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கி பிரபலமானார். தற்போது இவர் தயாரித்து இயக்கி உள்ள திரைப்படம் வாழை. இந்த படத்திற்கு தேனீ ஈஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் .

நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ” ஒத்த ச

Advertisement

ட்டி சோறு” என்ற இந்த பாடல் கபில் கபிலன் மற்றும் ஆதித்யா ரவீந்திரன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Advertisement