“கோட்ட விட்ராதீங்க” முஸ்லீம் வாக்கு வங்கியை விட்டுடக்கூடாது… நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மென்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கோட்ட விட்ராதீங்க” முஸ்லீம் வாக்கு வங்கியை விட்டுடக்கூடாது… நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரகசிய அசைன்மென்ட்..!!

Published

on

திமுக சிறுபான்மை நலப்பிரிவு மற்றும் வர்த்தகர் அணி நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். வரவிருக்கும் அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் களங்களை எதிர்கொள்ளும் வகையில், கட்சி அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தமிழக அரசியல் களம் பல மாற்றங்களைக் கண்டது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்றபோதிலும், திமுக தனது பாரம்பரிய இஸ்லாமிய வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்தத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சிறுபான்மையினரின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றுள்ளதை திமுக உறுதி செய்துள்ளது.

Advertisement

இந்தச் சூழலில், தக்க வைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வாக்கு வங்கியை அப்படியே நீட்டிக்கவும், கட்சியை மேலும் அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாராம். வர்த்தகர் அணி மற்றும் சிறுபான்மை பிரிவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in