LATEST NEWS
சத்யராஜ் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர். தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது. சத்யராஜுக்கு ஒரு மகளும் உள்ளார். படித்து முடித்து சில மாதங்களிலேயே இந்தியாவிலுள்ள டாப் நியூட்ரிஷன் ஒருவர்களில் மாறிவிட்டார் சத்யராஜ் மகள் திவ்யா.
தற்போது ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள அங்காரகன் திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லனாக நடித்துள்ளார். ஹாரர் திரில்லர் ஆக உருவாக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீபதி, மகேஷ் மற்றும் அப்பு குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி சத்யராஜின் தாயார் உயிரிழந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் சத்யராஜ் நேரில் சந்தித்து அவருடைய தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் சென்று இருந்த நிலையில் தற்போது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க