LATEST NEWS
பொது இடத்தில் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம.. பளார்னு ஒன்னு விட்டுருக்கணும்.. ஸ்கூல் சுரேஷ் பற்றி தொகுப்பாளினி பளீச்..!!

தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட. எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசங்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான்.
இந்த நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியான சரக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் கலந்து கொண்ட நிலையில் அங்கிருந்த தொகுப்பாளரிடம் கழுத்தில் மாலையை போட்டார். உடனே அந்தப் பெண் மேடையிலேயே மாலையை கழட்டி வீசி எறிந்து தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தினார். தற்போது இந்த சம்பவம் குறித்து பேசி உள்ள தொகுப்பாளர் ஐஸ்வர்யா, எனக்கு அந்த சம்பவம் இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியாக உள்ளது.
பொது மேடையில் திடீரென்று இப்படி நடந்து கொண்டால் என்ன செய்ய முடியும், எனக்கு அப்பவே அவரை அடிச்சிருக்கணும்னு தோணுச்சு. இதற்கு முன்னாடியும் என்னிடம் அப்படி அவர் நடந்து கொண்டுள்ளார். இனியும் அப்படி செய்தால் கன்னத்தில் ஒரு அடியாவது கொடுத்திடுவேன் இல்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று தொகுப்பாளினி பேசியுள்ளார்.