அடச்சீ.. மசூதிக்குள் எல்லை மீறிய தம்பதி.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ.. மசூதிக்குள் எல்லை மீறிய தம்பதி.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..!!

Published

on

சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் உள்ள ஒரு மசூதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் உள்ள ‘தஃசீர்’ அதாவது, நீதிபதியின் விருப்பத்திற்குரிய தண்டிக்கும் அதிகாரம் என்ற பிரிவின் கீழ் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. புனிதமான மசூதியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்ததால், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, தங்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் சவூதி அரேபியாவிடமிருந்து வரவில்லை என்று ஜெத்தாவில் உள்ள பங்களாதேஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in