LATEST NEWS
100 ஆண்டுகள் ஆனாலும் வாய்ப்பே இல்ல… பாஜக கூட்டணியை வெட்டி வீசிய தவெக..! திமுகவின் ‘மறைமுக கூட்டணி’ புகாருக்கு பதிலடி கொடுத்த CTR நிர்மல்குமார்..!!
கொள்கை எதிரியான பாஜகவுடன் எந்தக் கூட்டணியும் இல்லை என அமைச்சர் CTR நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, 100 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவுடன் தவெக கூட்டணி அமைக்காது என அமைச்சர் ஆதவ்வும் தெரிவித்திருந்தார். தவெக – பாஜக மறைமுகக் கூட்டணி என திமுக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
