LATEST NEWS
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக் அம்மாவாக நடிக்கும் கோதைக்கு தீபக்கை விட வயசு கம்மிதானா?.. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ஹீரோவாக தொகுப்பாளர் தீபக் நடித்து வரும் நிலையில் இதற்கு முன்னதாக திருமதி செல்வம் மற்றும் தென்றல் வெளியிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சீரியலில் நடிக்காமல் இருந்த இவர் மிகப்பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வருகிறார்.
இதில் இவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கின்றார். இந்நிலையில் இந்த சீரியலில் தீபக் அம்மாவாக கோதைநாயகி என்ற கதாபாத்திரத்தில் மீரா கிருஷ்ணா என்பவர் நடித்து வருகின்றார். அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு சீரியல் நாயகன் தீபக்கின் வயதை விட குறைவுதானாம்.
அதாவது ஹீரோவாக நடித்து வரும் தீபக் வயது 42 ஆகும் நிலையில் சீரழில் அம்மாவாக நடித்து வரும் மீரா கிருஷ்ணாவுக்கு தற்போது 34 வயதுதான் ஆகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது