LATEST NEWS
திடீரென பிரேக் அப் செய்து பிரிந்த பிக்பாஸ் பிரபலம் அமீர் – பாவனி?… தீயாய் பரவும் செய்திக்கு அவர்களே கொடுத்த விளக்கம்..!!

தனது நடனத்தை உயிர் மூச்சாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் சாதித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அமீர். இவர் மீடியாவில் நுழையும் போது நடனம் மட்டும் தான் இவருக்கு தெரியும். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான பாவனியை காதலித்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இவர்கள் இருவரும் தற்போது காதல் ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் துணிவு திரைப்படத்தில் கூட இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. தற்போது ஒரே பிளாட்டில் பாவணி அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு பாவனியின் அம்மா கூறிவிட்டதாகவும் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக ஹோம் டூர் வீடியோவில் பாவனி கூறி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பாவணி தான் சிங்கிள் என்று கூறியிருந்த நிலையில் அவர்கள் பிரேக்கப் செய்து விட்டார்கள் என செய்தி இணையத்தில் பரவியது. தற்போது இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ள அமீர் மற்றும் பாவணி ஜோடி, தங்களின் பிரேக்கப் செய்தி உண்மை இல்லை எனவும் வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.