90களில் கலக்கிய நடிகை பானுப்பிரியாவா இது?.. உடல் எடை மெலிந்து இப்படி ஆகிட்டாங்களே?.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

90களில் கலக்கிய நடிகை பானுப்பிரியாவா இது?.. உடல் எடை மெலிந்து இப்படி ஆகிட்டாங்களே?.. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா. இவர் நடிகை என்பதையும் தாண்டி தன்னை ஒரு சிறந்த நடன கலைஞராகவும் காட்டியுள்ளார். 90களில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அதே சமயம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர். இவர் கிட்டதட்ட 150 படங்களுக்கு மேல் நடித்திருந்தும் தற்போதும் தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான இவருக்கு அபிநயா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

Advertisement

பானுப்பிரியா தமிழில் கடைசியாக பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் பானுப்பிரியா கணவர் மறைவால் தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பானுப்பிரியா உடல் எடை மெளிந்து மிகவும் அமைதியாக மெதுவாக நடந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நடனத்தில் அசத்திய பானுப்பிரியா தற்போது மெதுவாக நடந்து வந்ததை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in