LATEST NEWS
பாட்ஷா படத்தில் ரஜினி இப்படி ஒரு விஷயம் பண்ணாரா?.. அன்னைக்கு அது நடக்கலனா படம் பிளாப் தான்.. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கிய இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாட்ஷா. ஹிந்தியில் அமிதாப் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான ஹம் என்ற திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றும் கூறலாம். இதில் ரியல் லைஃபில் ஆட்டோ டிரைவர் ஆகவும் பிளாஷ்பேக்கில் ஒரு டான் ஆகவும் ரஜினி நடித்திருப்பார்.
இந்தத் திரைப்படம் ரஜினியின் வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பாட்ஷா பாரு பாஷா பாரு என்ற பாடல் எஸ் பி பி குரலில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலின் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் முன்பு தட்டில் பணம் இருக்கும். அப்போது உள்ளூர் டான்கள் பலரும் ரஜினியை வந்து நேரில் சந்தித்து அவரின் கையில் முத்தமிட்டு செல்வார்கள்.
இந்த காட்சி படமாக்கப்பட்ட போது எல்லாம் சரியாக இருக்கு ஏதோ ஒன்று மட்டும் மிஸ் ஆகுதே என்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா யோசித்த நிலையில் தான் பக்கத்தில் ஒரு நாய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார். அப்போது புரொடக்ஷன் ஆபீஸில் ஒரு பெரிய நாய் இருந்த நிலையில் அதனைப் பார்த்து அனைவரும் பயப்பட்டனர். ஆனால் அந்த நாயின் தலையை ரஜினி தடவி கொடுத்தவுடன் அந்த நாய் ரஜினியின் அருகில் படுத்து விட்டது. இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்ததாகவும் அதன் பிறகு அந்த காட்சியை படமாக்க செய்ததாகவும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.