“ஒரு நாளைக்கு 150 சிகரெட் புடிப்பாரு”.. வெற்றிமாறன் சிகரெட்டை விட்ட காரணம் குறித்து பேசிய மனைவி…!! - Cinefeeds
Connect with us

VIDEOS

“ஒரு நாளைக்கு 150 சிகரெட் புடிப்பாரு”.. வெற்றிமாறன் சிகரெட்டை விட்ட காரணம் குறித்து பேசிய மனைவி…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் திரைப்படம் முதல் இறுதியாக இயக்கிய விடுதலை திரைப்படம் வரை அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் வெற்றிமாறனின் சிகரெட் பழக்கம் குறித்து பேசி உள்ளார்.

அதில், அவர் எடுத்த மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று என்றால் அது புகை பிடிப்பதை விடுவது தான். 2003 ஆம் ஆண்டு புகைப்பிடிப்பதை விட வேண்டும் என்று முடிவு செய்தார். எனக்கு நெஞ்சு வலிப்பது போல இருக்கிறது என்று கூறினார். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆஞ்சியோ செய்தோம். அப்போது மருத்துவர்கள் நீங்கள் புகை பிடிப்பதை விட வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியிலேயே காரை நிறுத்திவிட்டு ஒரு சிகரெட் வாங்கி தம்மடித்தார்.

அப்போது என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்போது கூட புகைபிடிப்பதை நிறுத்த சொல்லி நான் அவரை வற்புறுத்த வில்லை. இருந்தாலும் நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால் போகப் போகத்தான் நலமாக இருந்ததால் தான் தன்னுடைய கனவில் சாதிக்க முடியும் என்று அவர் புரிந்து கொண்ட நிலையில் ஒரு கட்டத்தில் அதனை நிறுத்தி விட்டு ஆபீஸில் கூட யாரும் புகை பிடிக்கக் கூடாது என்று அவர் சொல்லிவிட்டார் என வெற்றிமாறன் புகைபிடிப்பதை நிறுத்திய சம்பவத்தை அவரது மனைவி பகிர்ந்து உள்ளார்.