VIDEOS
ஆர்யா பண்ண அந்த ஒரு விஷயத்தால நான் தினம் தினம் திட்டு வாங்குறேன்… மார்க் ஆண்டனி மேடையில் பேசிய நடிகர் விஷால்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவர் தற்போது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தில் ரிது வர்மா மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய நடிகர் விஷால், நடிகர் ஆர்யா பற்றி சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது நடிகர் ஆர்யா பல இடங்களுக்கு சைக்கிள் ரைடு சென்றுள்ளதால், ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து கொண்டு அந்த கொடியை சைக்கிளில் கட்டிக் கொண்டு அப்படியே சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்றும் நடிகர் ஆர்யா தனக்கு ஒரு சகோதரர் மாதிரி எனவும் விஷால் பேசினார்.
மேலும் ஆர்யாவின் மனைவி சாயிஷா தனக்கு ஒரு தங்கை மாதிரி எனவும் ஆர்யா திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு மகளுக்கு அப்பாவாக உள்ளதில் நானும் என் பெற்றோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஆர்யா திருமணம் செய்ததற்குப் பிறகு என்னை வீட்டில் அதிகமாக திட்டுறாங்க என்று விஷால் பேசிய ஒரு வீடியோ தற்போது வைரல் ஆக்கி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க