LATEST NEWS
விஜய் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய பாக்கியலட்சுமி புகழ் திவ்யா…. இனி அவருக்கு பதில் இவர்தான்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் குடும்ப கதாபாத்திரங்களை கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. அதில் பல சீரியல்களும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து உள்ளன. அவ்வகையில் விஜய் டிவி டாப் சீரியல்களில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த கதை குடும்ப தலைவியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினந்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது.
இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகின்றார். இந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியலிலும் மெகா என்ற கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்து வருகிறார். தற்போது திவ்யா செல்லம்மா சீரியலில் இருந்து விலகி உள்ளதாகவும் அவருக்கு பதில் புதிய மேகாவாக ஸ்ரேயா என்பவர் நடிக்க வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க