LATEST NEWS
நடிகர் மொட்டை ராஜேந்திரனுக்கு முடி எப்படி போனது தெரியுமா?…. அவரே கூறிய உண்மை காரணம் இதோ….!!!!

எப்போதுமே மொட்டை தலை மற்றும் கரகர வென்ற தனித்த குரல் கொண்ட இவரை அனைவரும் மொட்டை ராஜேந்திரன் என்று தான் அழைப்பார்கள். ஆரம்ப காலத்தில் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு சிறிய சிறிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலும் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அசத்தி வந்தார்.
மொட்டை தலை தான் இவரின் அடையாளமாக உள்ளது. ஆனால் இவர் பிறந்தது முதலே இப்படி இல்லை. இவர் சண்டை நடிகராக நடித்த போது இவருக்கு அனைவரை போலவும் முடி இருந்துள்ளது. ரெட் இந்தியன் என்ற மலையாள திரைப்படத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கதாநாயகனிடம் அடிவாங்கி இவர் குலத்தில் விழுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது. ஆனால் இவர் விழுந்த அந்த குலத்தில் ரசாயன நீர் தேங்கியிருந்துள்ளது.
அதில் விழுந்ததால் இவருக்கு முடிகள் நாளடைவில் கொட்ட தொடங்கியது. ஒரு கட்டத்தில் நிறைய முடிகள் கொட்டியதால் மொட்டை அடித்துக் கொண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது அதுவே அவருக்கு அடையாளமாக மாறிவிட்டது. இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து உள்ளார்.