LATEST NEWS
விஜய் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?…. இப்போ இவங்க தான் அந்த நடிகை…. இதோ நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை விஜய் பாடியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
இதனிடையே பல வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் நடிகர் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுபிள்ளை ஆக இருந்த நடிகையை விஜய் தனது கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் தான். அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்றால் தமிழ் சின்னத்திரையில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹிமா பிந்து தான்.
தனது சிறுவயதில் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது இவர் சன் டிவியில் இலக்கியா என்ற சீரியலில் நடித்து வருகின்றார். இதற்கு முன்பும் பல சீரியல்களில் அவர் நடித்துள்ள நிலையில் தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.