CINEMA
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்…. மகள் வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!

சின்னத்திரை நடிகர் நேத்ரன் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருடைய மனைவி நடிகை தீபா. இந்த தம்பதிகளுக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக இவருடைய மகள் அபிநயா வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய தந்தைக்கு புற்றுநோய் என்றும் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கூறியிருந்தார்.
தற்போது அபிநயா பேசுகையில் தன்னுடைய தந்தை மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் விரைவில் பழைய நிலைக்கு வந்து விடுவார் என்றும் கூறியுள்ளார். எனக்கு முக்கிய துணையாக இருப்பது என்னுடைய தன்னை தான். எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களுக்கு தைரியம் கொடுப்பார் . சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கு தைரியம் கொடுத்தார். ஆனால் அப்பா குறித்து நான் முதல் வீடியோ வெளியிட்ட போது பலரும் மோசமான கருத்துக்களை வெளியிட்டு இருந்தது எனக்கு மனக்கவலையாக இருந்தது என்று கூறியுள்ளார்.