LATEST NEWS
சொந்த ஊருக்கு சென்ற மாரிமுத்துவின் உடல்.. கண்ணீர் விட்டு கதறிய ஒட்டுமொத்த கிராமம்.. இன்று நடைபெறும் இறுதி சடங்கு…!!
தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதே சமயம் இவர் நடித்து முடித்துள்ள பல திரைப்படங்களும் அடுத்தடுத்து வழியாக உள்ளன.
குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் நேற்று டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மாரிமுத்துவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தற்போது நடிகர் மாரிமுத்துவின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலமாக தேனி மாவட்டம் பசுமலை தேரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சரை செலுத்திய நிலையில் அவரின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என அவரது மகன் அகிலன் தெரிவித்துள்ளார்.
