CINEMA
WWE வீரர்களுடன் நடிகர் கார்த்தி… ஜான் சினாவுடன் கைகுலுக்கிய தருணம்.. வெளியான புகைப்படம்..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி 13 முறை WWE உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜான் சினாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஜான் சினா உள்ளிட்ட ஒரு சில முன்னணி மல்யுத்த கலைஞர்களுடன் நடிகர் கார்த்திக் நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ஹைதராபாத்தில் நடைபெறும் WWE சூப்பர் ஸ்டார் ஸ்பெக்ஸ்டாக்கிள் 2023 நிகழ்ச்சிக்காக பிரபல மல்யுத்த வீரர்கள் அங்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவின் லைவ் WWE நிகழ்வுகள் ஹைதராபாத்தில் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்விற்கான பிரமோஷன் பணிகளில் நடிகர் கார்த்தி ஈடுபட்டுள்ளார்.
அதேசமயம் நடிகர் கார்த்தி சமீபத்தில் WWE டேக் டீம் மேட்சுகளை விளையாடி வரும் கெவின் ஓவன்ஸ் மற்றும் சமி ஜெய்ன் ஆகியோருடன் ஒரு புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.