CINEMA
தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு நின்று செல்பி எடுத்துக் கொண்ட மாரிமுத்து… கலங்க வைக்கும் புகைப்படம்..!!

தமிழ் சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்து சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதாவது அஜித்துடன் வாலி திரைப்படம் தொடங்கி மாறி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், ரஜினியின் ஜெயிலர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் மாரிமுத்து குணசித்திர வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதே சமயம் இவர் நடித்து முடித்துள்ள பல திரைப்படங்களும் அடுத்தடுத்து வழியாக உள்ளன.
குறிப்பாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைப் போலவே இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில் நேற்று டப்பிங் பணியின் போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் பல இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் மாரிமுத்து எடுத்த ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விழா நாயகன் என்ற படத்தில் நடித்த போது படப்பிடிப்பின் போது தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு மாரிமுத்து செல்பி எடுத்தபடி நிற்கின்றார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.