LATEST NEWS
கில்லி படத்துல முதல்ல கமிட்டானது விஜய் இல்லையா?…. அந்த பிரபல நடிகரா…. அச்சச்சோ மிஸ் பண்ணிட்டாரே…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் குதித்து இருக்கின்றார். விஜய் கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக இருந்தது கில்லி, இப்படத்தில் முதலில் விஜய் கமிட் ஆகவில்லையாம். அவருக்கு பதிலாக யார் நடிக்க இருந்தார் என்பதை பற்றி தான் நாம் இதில் பார்க்கப் போகிறோம்.

#image_title
நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான ஒக்கடு என்ற திரைப்படத்தின் ரீமேக்காக உருவான திரைப்படம் தான் கில்லி. இந்த திரைப்படம் விஜய்க்கு மாஸ் ஹிட்டான திரைப்படமாக அமைந்தாலும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்புக்கொண்டவர் விக்ரம் தான். ஏனெனில் அந்த சமயத்தில் ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

#image_title
தூள் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்த விக்ரம் மற்றும் ஜோதிகாவை கில்லி திரைப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஹீரோவாக விக்ரம் மற்றும் ஹீரோயினியாக ஜோதிகாவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் பேசி முடிவெடுத்து இருக்கிறார்கள்.

#image_title
ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்கள் இருவரும் அருள் படத்தில் கமிட்டாகி விட்டனர். அதே ஜோடி மீண்டும் நடித்தால் நன்றாக இருக்காது என்று முடிவு செய்து விஜயை இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் தரணி. இதை எடுத்து கில்லி திரைப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது.