LATEST NEWS
ஐயோ…! அம்மா பேய்…! கான்ஜூரிங் பேய்யாக மாறிய தலைவர் பட நடிகை…. வைரல் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை ரித்திகா சிங். இவரின் முதல் படமே இவருக்கு ஏகபோக வரவேற்பை கொடுத்தது. அது மட்டுமில்லாமல் இவர் நிஜத்திலும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையான இவர் படத்திலும் அதே கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருந்தார். அதன் பிறகு காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் கையில் ஏகப்பட்ட பட வாய்ப்புகளை வைத்திருக்கின்றார். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன், பகத் பாஸில், மஞ்சுவாரியர், ராணா ரகுபதி ஆகியோரை வைத்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகிவரும் வேட்டையன் திரைப்படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Ritika Singh goes crazy in an empty gym 😂😂#RitikaSingh #Vettaiyan #KingOfKotha #Kolai pic.twitter.com/40XgVXwwHC
— Karl Marx2.O (@Marx2PointO) April 1, 2024
சமீபத்தில் அவர் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூகவலை பக்கங்களில் வெளியிட்டிருந்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரித்திகா சிங் அவ்வபோது தான் எடுக்கும் போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தலைகீழாக கான்ஜூரிங் பேய் போல் நடந்து வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.