Uncategorized
தலையையெடுக்கும் கொரோனா தன்னம்பிக்கை அளிக்கும் அரசுகள்- விவரம் உள்ளே.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியர்களிடையே மட்டும் இல்லாமல் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது இந்த வைரஸ் வேகமாக பரவுவதால் உலக நாடுகள் பலவற்றிலும் விமான நிலையம் பலவும் மூடப்பதது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 110ஆக அதிகரித்திருப்பதாகவும் இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி டெல்லி மற்றும் கர்நாடகாவில் உயிரிழந்த இருவரும் அடங்குவர். சவுதி அரேபியாவில் இருந்து கர்நாடக மாநிலம் கலபுர்கிக்கு 76 வயது முதியவர் திரும்பியுள்ளார். அவருக்கு வைரஸ் தொற்று இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதே போல் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 68 வயது மூதாட்டியும் பலியானார். நேற்று புதிதாக மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு உண்டாகி இருக்கிறது. கர்நாடகாவில் 6 பேருக்கும், மகாராஷ்டிராவில் 32 பேருக்கும், லடாக்கில் 3, ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.தெலங்கானாவில் மூன்று பேருக்கும், ராஜஸ்தானில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 22 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது.
இவர்களில் 3 பேர் ஃப்ளூ அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது இவர்களும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசாங்கம் தனியார் இரத்த பரிசோதனை நிலையங்கள் கோரோனோ பரிசோதனை மேற்கொள்ள கூடாது. என தமிழ் நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.கொரோனா அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கைகளை கழுவி கொண்டு உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.அதேபோல் தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பதற்றம் வேண்டாம். மன உறுதியோடு எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துங்கள், எனவும் மத்திய மாநில அரசுகளும் அறிக்கை மற்றும் செய்திகள் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.