LATEST NEWS
உலகப் புகழ்பெற்ற கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்த ஜிவி பிரகாஷ்… வெளியான புகைப்படங்கள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலின் தொடக்க வரிகளை தனது மழலை குரலில் பாடியவர் இவர்தான். அங்கிருந்து இசை சிறகை விரித்து பறக்க தொடங்கியவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.
இவருக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அண்மையில் தான் சூரரைப் போற்று திரைப்படத்தின் பின்னணி இசைக்காக விருது பெற்றார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான விசாரணை திரைப்படம் இவருக்கு திரை உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இவரின் அம்மா ஒரு இசையமைப்பாளர், மனைவி சைந்தவி ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. கலை குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜிவி பிரகாஷின் தாய் மாமா தான் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவி சைந்தவி, தங்கை பவானி மற்றும் தந்தையுடன் மயிலாடுதுறை மாவட்டம் தரகம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
உலக அளவில் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று ஜிவி பிரகாஷ் வழிபாடு செய்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.