லியோ படபிடிப்புக்கு நடுவே கொண்டாடப்பட்ட GVM பிறந்தநாள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

லியோ படபிடிப்புக்கு நடுவே கொண்டாடப்பட்ட GVM பிறந்தநாள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

இயக்குனர் மற்றும் நடிகரோட கௌதம் வாசுதேவ் மேனனின் பிறந்தநாள் கொண்டாட்டம் லியோ படப்பிடிப்பு தளத்தில் வெகு விமர்சையாக நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு தான் வெளியானது. S.லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படபிடிப்பு கடந்து ஜனவரி 2ஆம் தேதி தொடங்கியது.

தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் அனைவரும் காஷ்மீர் சென்றுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார்.

Advertisement

இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணியாற்ற நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டர் மேற்கொண்டு வருகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த்,மிஸ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

Advertisement

இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பிற்கு நடுவே நடிகர் மற்றும் இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

Advertisement

அதில் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்ட கேக் ஒன்றின் முன்பாக கௌதம் வாசுதேவ் மேனன் நிற்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அவரை சூழ்ந்து நிற்கின்றனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in