LATEST NEWS
நடிகர் விக்ராந்த் மனைவி மற்றும் 2 பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவரின் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திரை பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் தான் விஜய். இவருடைய சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த். தமிழில் வெளிவந்த முத்துக்கு முத்தாக,கோரிப்பாளையம் மற்றும் கவண் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவர் பிரபல சீரியல் நடிகை மானசாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் விக்ராந்த் மனைவி மானசா திருமணத்திற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்துள்ளார். அதாவது சன் டிவியின் உதிரிப்பூக்கள் சீரியலில் அவர் நடித்துள்ளாராம். தற்போது விக்ரம் மற்றும் மானசாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.