LATEST NEWS
இயக்குனர் வெற்றிமாறனின் அம்மா, அக்காவை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் முதலில் இயக்கிய திரைப்படமான பொல்லாதவன் திரைப்படம் நடப்பு நிலைக்கு மிக அருமையாக படம் பிடித்து காட்டியதற்கு மிகுந்த பாராட்டுகளை பெற்றது.
அடுத்ததாக இவர் இயக்கிய ஆடுகளம் திரைப்படம் 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு தேசிய விருதுகள் கிடைத்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை மற்றும் சூர்யாவை வைத்து வாடிவாசல் என பெரிய திரைப்படங்களை இயக்கி வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறனின் அக்கா மற்றும் அம்மாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.